நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தமிழ் திரையுலக காமெடி நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழும் நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 1984-இல் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மயில்சாமி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் கமலின் அபூர்வ சகோதரர்கள் ரஜினிகாந்தின் பணக்காரன் கில்லி, தூள் உள்ளிட்ட பல படங்கள் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன.
விவேக் வடிவேலு உள்ளிட்டவர்களுடன் நடித்த மயில்சாமி ரசிகர்களை தனது அற்புதமான நகைச்சுவை திறமையால் கவர்ந்தார். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், கோவை சரளா, மனோபாலா, போன்ற தமிழ் காமெடி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வண்டலூர் அருகே நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டார். இதுவே அவரது கடைசி நிகழ்ச்சி. சிவ பக்தரான நடிகர் மயில்சாமி அனைவருக்கும் உதவும் மனம் உள்ளவர் என்று அவரது உடன் இருந்த பல்வேறு மறக்கமுடியாத நினைவுகளை நேரலைகள் மற்றும் இணையதளம் வாயிலாக பிரபலங்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…