முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி.! களத்தில் இறங்கி விளையாடி மகிழ்ந்த அமைச்சர் உதயநிதி.!

Default Image

முதலமைச்சர் கோப்பை போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் எம்பி தயாநிதி மாறனுடன் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.   

தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான தமிழக விளையாட்டான சிலம்பம் , கபடி என ஆரம்பித்து கிரிக்கெட் வரையில் 15 விளையாட்டுகள் விளையாடி அதில் மாநில அளவில் பரிசை வெல்லும் முனைப்பில் முதலமைச்சர் கோப்பை எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மொத்த பரிசுதொகை 25 கோடியாகும்

இதில் மாணவர்கள், மாற்று திறனாளிகள் முதல் அரசு ஊழியர்கள் வரையில் 18 வயது முதல் 35 வயது வரையில் தனி நபர் குழு என பலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவுகள் முடிந்து இன்று இந்த போட்டிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றன.

இந்த போட்டியை இன்று சென்னையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, எம்பி தயாநிதிமாறன் உடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்