மோடிக்கும் பயப்படமாட்டோம்.. EDக்கும் பயப்பட மாட்டோம்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!

மோடிக்கும் பயப்படமாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், அண்ணா உருவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை நிலையில், அதனை கண்டு பொறுக்கமுடியாமல் அழுத்தம் தர முயற்சி செய்கிறார்கள்.
திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, தொழில்நுட்ப அணி பல்வேறு பிரிவுகள் உண்டு, அது போல அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி என பல இருக்கிறது அது பல பாஜகவிலும், ED அணி , CBI அணி, வருமானவரித்துறை அணி என பல்வேறு அணிகள் உள்ளன.
ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் தேடி பார்த்தார்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போது அமைச்சர் பொன்முடியிடம் தேடி கொண்டு இருக்கிறார்கள். அங்கும் ஒன்றும் கிடைக்காது. இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நாங்கள் மோடிக்கும் பயப்பாட மாட்டோம். EDக்கும் பயப்பட மாட்டோம். எங்கள் திமுக கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை கூட்டத்தில் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025