பிறந்தான் பரிசு… துணை முதல்வர் பொறுப்பு.? அமைச்சர் உதயநிதியின் கலகலப்பான பதில்.!
தமிழக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள்,திமுக பிரதிநிதிகள், பிற கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாந்தி நினைவிடம், அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு ஆகியோர் இருந்தனர். அதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
அப்போது, செய்தியாளர்கள் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் முக்கியமாக, கடந்த பிறந்த நாள் அப்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதே போல இந்த பிறந்தநாளுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுமா என்று கேட்டனர். அதற்கு பதில் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தெரியவில்லை. இது எதையும் நான் முடிவு செய்யவில்லை. முதல்வர் தான் முடிவு செய்கிறார் என்று தெரிவித்தார்.
பின்னர் நலத்திட்ட உதவிகள் பற்றி கேட்கையில், அமைச்சர் ஆனபிறகு இல்லை. எனது எல்லா பிறந்தாளுக்கும் அமைச்சர் சேகர்பாபு ஏதேனும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்வார். அது எப்போதுமே மனதிற்க்கு மகிழ்ச்சி தரும். இந்த பிறந்தாநாளுக்கு என்று எதுவும் இல்லை. டிசம்பர் 17அன்று சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மீண்டும் செய்தியாளர் , துணை முதல்வர் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும் என மக்கள் விருப்புகிறார்கள் என கூறவே, இதனை கேட்ட அமைச்சர் உதயநிதி , அது மக்கள் கோரிக்கை அல்ல அது உங்கள் கோரிக்கை என கலகலப்பாக பதில் கூறிவிட்டு சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.