பாடகி பவதாரிணியின் உடலுக்கு நேரில் வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இதற்கான சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸடாலின் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளும், என் நண்பர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான தங்கை பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. கருணாநிதியின் குடும்பம் சார்பாக இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் அஞ்சலி செலுத்த வர வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் நாளை மாலை அவர் வெளிநாடு கிளம்புகிறார். இதனால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறார். அவர் சார்பில் இப்போது நான் அஞ்சலி செலுத்த வந்தேன்” என கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…