முதல்வர் கோப்பைக்கு 47 கோடி.. உதவித்தொகை 6 ஆயிரம்.. அமைச்சர் உதயநிதியின் உத்தரவுகள்…
தனது முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
தமிழக அமைச்சரவையில் இன்று நடைபெற்ற மாற்றங்களில் மிக பெரிய மாற்றமாக புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
அடுத்து , வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் கோப்பு ஆகியவற்றில் கையெழுத்திட்டார். மேலும், துப்பாக்கி சூடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு 4 லட்சம் ரூபாய் காசோலையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.