தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்.!
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான, அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், தன்மீது அவதூறு பரப்பியதற்காக 50 கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணாமலை, சமீபத்தில் திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டிருந்தார், இதற்கு அண்ணாமலை தகுந்த பதில் அளிக்கவேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி தன் பெயருக்கு அவதூறு விளைவிப்பதாகக்கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இன்னும் 48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வில்லையென்றால், தனக்கு நஷ்ட ஈடாக 50 கோடி ரூபாய் வழங்கவேண்டும். மேலும், அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இந்த 50 கோடி நிதியானது முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.