அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்; மன்னிப்பு கேட்கமாட்டேன் அண்ணாமலை பதில்.!
அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு, நான் வெளியிட்ட தகவல்கள் உண்மையானவை, எனவே மன்னிப்பு கேட்கமாட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான, மற்றும் தன்மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக்கூறி, அமைச்சர் உதயநிதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார், தன்னிடம் 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவதூறு பரப்பியதற்காக 50 கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அவருக்கு அனுப்பிய அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்ணாமலை, சமீபத்தில் திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டிருந்தார், இதற்கு அண்ணாமலை தகுந்த பதில் அளிக்கவேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை, உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு பதில் கூறியிருக்கிறார்.
அண்ணாமலை இது குறித்து கூறியதாவது, தான் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளிவிவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியாக கூறியுள்ளார். இதனால் உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது, 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறி என் குரலை அடக்கப்பார்க்கும் முயற்சியாக அண்ணாமலை கூறியுள்ளார்.