நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

UdhayanidhiStalin

நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் எனவும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

ஊழல் மலிந்த கலாச்சாரம், சாதிமத பேதங்கள் பிளவுவாத கலாச்சாரத்தை எதிர்த்து தனது அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதுபோன்று, நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது – சீமான்

அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயின் அரசியல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி கூறியதாவது, இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. இதனால் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். விஜயின் மக்கள் பணி சிறக்கட்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்