தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! அமைச்சர் கொடுத்த சூப்பரான அப்டேட்!
தூத்துகுடியில் நேற்று மினி டைடல் பார்க்கை தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மினி ஐடி பார்க்கில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் உணவு கூடங்கள், பார்க்கிங் என பல்வேறு வசதிகள் கொண்டுள்ளன.
இந்த திறப்பு விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா. பெ.கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஐடி பார்க் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தூத்துக்குடிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வரவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், தென் தமிழகத்திற்கு பல்வேறு தொழில்வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். தூத்துக்குடியில் திறக்கப்பட்டுள்ள டைடல்நியூ பார்க், தென் தமிழகத்தின் முதல் டைடல் நியூ ஐடி பார்க் ஆகும். இதன் மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 ஐடி பார்க் அமைக்கப்படும் என கூறப்பட்டது. அதில், 4வது ஐடி பார்க் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அதில், இன்னும் 3 மீதம் உள்ளது. ஊட்டியில் புதுமையான முயற்சியில் ஐடி பார்க் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சியில் ஐடி பார்க் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, பட்டாபிராம் பகுதியில் ஐடி பார்க் உள்ளது. தூத்துக்குடி எம்பி கனிமொழி, தூத்துக்குடியில் மேலும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளார். தூத்துக்குடிக்கு பிரமாண்ட வளர்ச்சி உறுதி. விரைவில் கார் நிறுவன தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில் வெகு வேகமாக இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அத்திட்டத்தை கண்காணித்து வருகிறோம். தென் மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ” என்று தென்தமிழக வளர்ச்சி குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.