மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி என் மீது வழக்கு போட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை மண்டல உதவி தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறுகையில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்.அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்.உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் ரூ.9.17 கோடி மதிப்புள்ள மின்சாரம் பெறப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது.உங்களுக்கு தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.அவர் கூறுகையில்,மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு. ஒரு வாரத்தில் என் மீது ,மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வழக்கு போட வேண்டும் .மின்துறை அமைச்சர் தங்கமணி என் மீது வழக்கு போடவில்லை என்றால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ வரை கொண்டுசெல்வோம்.அதேபோல் காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை.மேலும் குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…