பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர்.. ‘நொண்டி சாக்கு’ அதிமுக.! அமைச்சர் கடும் விமர்சனம்.!

ADMK Chief Secretary Edappadi Palaniswamy - Minister Thangam Thennarsu

தமிழக சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி , கடந்த நவம்பர் 13ஆம் தேதி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுபினார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் 10 சட்டமசோதாக்கள் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அனல் பரந்த விவாதம்… வெளிநடப்பு.! சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்.!

பாஜக – அதிமுக வெளிநடப்பு : 

சட்டமசோதா நிறைவேற்ற படும்போது, அதன் மீதான விவாதத்தில் பிற கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது பாஜக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் கொண்டு வந்த தீர்மானங்கள் மீது எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.

நொண்டி சாக்கு : 

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தங்கள் கருத்து குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், அதிமுக வெளிநடப்பு செய்ய காரணத்தை தேடி தேடி , தீர்மானம் நிறைவேற்றும் போது சட்டப்பேரவையில் இருக்க கூடாது என்று அதிமுகவினர் ஒரு நொண்டி சாக்கை கூறி வெளியேறிவிட்டனர்.

ஜெயலலிதா பெயர் : 

உண்மையில் அவர்கள் வெளியேறியதற்காக கூறிய காரணம் பொய்யானது. 2012இல் அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2020இல் அதிமுக ஆட்சியில் தான் அந்த மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டு அதற்கான சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் அதிமுக அனுப்பிய சட்ட மசோதாவுக்கு கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனையும் சேர்த்து, எந்தவித அரசியல் பாகுபாடும் இல்லாமல் தமிழக முதல்வர் இன்று மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் . அதற்கு கட்சி தார்மீக அடிப்படையில் அதிமுக சட்டப்பேரவையில் இருந்து ஆதரவு அளித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் என கூறினார்கள். ஜெயலலலிதா பெயரை கூறவில்லை என கூறி வெளிநடப்பு செய்கிறார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுக வெளிநடப்பு குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்