செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்காமல் ஆளுநர் ரவி முடிவு எடுக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார் .
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் கட்டுப்பாட்டில் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் எதிர்ப்புகள் வந்த நிலையில், ஆளுநர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர் மத்தியில் பேசினர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழக முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்ப உள்ளார் என தெரிவித்தார்.
மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவி முடிவு எடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. ஒரு அமைச்சரை நீக்குவதும் சேர்ப்பதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பொதுவாக ஆளுநர் எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுத்து வருவதை தமிழக அரசு நிராகரிக்கிறது என கூறினார்.
அடுத்ததாக, ஒரு அமைச்சரை அமைச்சரவையில் சேர்ப்பதும் நீக்குவதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நடைபெறும். திமுக எதனையும் சட்டரீதியாக எதிர்கொண்டு இன்றைய நாள் வரை வெற்றி பெற்றுள்ளது. 2ஜி வழக்கு , சர்க்காரியா கமிஷன் என பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு, பின்னர் அதில் இருந்து நாங்கள் வென்று வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார். மேலும் எதிர்க்கட்சியினர் மீதும் பல்வேறு ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் செந்தில் பாலாஜி விவாகரத்தை மட்டும் எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளுநர் தரப்பினர் குறி வைத்து சொல்வது ஏன் என்று தெரியவில்லை. ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாலயே அவர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இதில் எதோ அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…