மிக்ஜாம் நிவாரணம் : ரூ.6000 ரொக்கம் ஏன்.? எப்போது டோக்கன்.? அமைச்சர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் உருவாகி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை பெரும் பாதிப்புக்கு உள்ளக்கி உள்ளது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தை நிவர்த்தி செய்ய இன்னும் காலம் ஆகும் என பல்வேறு பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இன்னும் புறநகர் பகுதி ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.  அதனை  வெளியேற்றவும் ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதிமுக நிவாரண உதவி கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு.. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.  மேலும் மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள், பொருட்சேதம் உள்ளிட்டவைகளுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த 6000 ரூபாய் ரொக்க தொகையானது ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகஜாம் புயல் நிவாரண பணிகள் குறித்து இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில், 6000 ரூபாய் நிவாரண தொகை எப்போது வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதில், தமிழக அரசு அறிவித்துள்ள 6000 ரூபாய் நிவாரண தொகையானது ரொக்கமாக வழங்கப்படும். வங்கி கணக்குகளில் செலுத்துவதன் மூலம் சிலர் வங்கிகளில் வாங்கி வைத்துள்ள கடன் தொடர்பாக அவர்கள் வங்கி கணக்கில் இருந்து வசூலிக்கப்பட்டு விடுகிறது. ஏற்கனவே 1000 உரிமை தொகையிலும் இதே பிரச்சனை வந்தது. அதன் காரணமாகவே இந்த முறை ரொக்கமாக பணம் வழங்ப்படுகிறது.

ரொக்கமாக பணம் வழங்கப்படும் போது தான் , அது முழுதாக மக்களிடம் சென்றடையும் வரும் 16ஆம் தேதி முதல் இதற்கான டோக்கன் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுபடி வழங்கப்படும்.  சென்னையில் அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்கள், ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளவர்கள் முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Recent Posts

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

18 minutes ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

27 minutes ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

43 minutes ago

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

1 hour ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

3 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

3 hours ago