மிக்ஜாம் நிவாரணம் : ரூ.6000 ரொக்கம் ஏன்.? எப்போது டோக்கன்.? அமைச்சர் விளக்கம்.!
வங்கக்கடலில் உருவாகி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை பெரும் பாதிப்புக்கு உள்ளக்கி உள்ளது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தை நிவர்த்தி செய்ய இன்னும் காலம் ஆகும் என பல்வேறு பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இன்னும் புறநகர் பகுதி ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றவும் ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அதிமுக நிவாரண உதவி கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு.. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள், பொருட்சேதம் உள்ளிட்டவைகளுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த 6000 ரூபாய் ரொக்க தொகையானது ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகஜாம் புயல் நிவாரண பணிகள் குறித்து இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில், 6000 ரூபாய் நிவாரண தொகை எப்போது வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதில், தமிழக அரசு அறிவித்துள்ள 6000 ரூபாய் நிவாரண தொகையானது ரொக்கமாக வழங்கப்படும். வங்கி கணக்குகளில் செலுத்துவதன் மூலம் சிலர் வங்கிகளில் வாங்கி வைத்துள்ள கடன் தொடர்பாக அவர்கள் வங்கி கணக்கில் இருந்து வசூலிக்கப்பட்டு விடுகிறது. ஏற்கனவே 1000 உரிமை தொகையிலும் இதே பிரச்சனை வந்தது. அதன் காரணமாகவே இந்த முறை ரொக்கமாக பணம் வழங்ப்படுகிறது.
ரொக்கமாக பணம் வழங்கப்படும் போது தான் , அது முழுதாக மக்களிடம் சென்றடையும் வரும் 16ஆம் தேதி முதல் இதற்கான டோக்கன் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுபடி வழங்கப்படும். சென்னையில் அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்கள், ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளவர்கள் முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.