தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் தங்கம் தென்னரசும், அமைச்சர் முத்துசாமியும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்ததீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக துறையினர் கைது செய்தனர். 15 நாட்களில் நீதிமன்ற காவலில் இருந்து அவரை நேற்று 8 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உயர் சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து ஒப்புதல் பெற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த பரிந்துரைக்கு முதலில் ஒப்புக் கொள்ளாமல் அதில் தவறுகள் இருப்பதாக கூறி கோப்புகளை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. உடனடியாக தவறுகள் திருத்தப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் பெற அமைச்சரவை மாற்றம் குறித்த கோப்புகள் ஆளுனருக்குக் அனுப்பப்பட்டன. செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்ததுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கிரிமினல் வழக்கில் கைது செய்து உள்ளதால் அவர் அமைச்சர் பதவியில் தொடர முடியாது ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசு, செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் தங்கம் தென்னரசும், அமைச்சர் முத்துசாமியும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…