பரந்தூரில் ஏன் விமான நிலையம் வர வேண்டும்.? சட்டப்பேரவையில் தமிழக அமைச்சர் விளக்கம்.!
பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலையம் அமையவுள்ள நிலங்கள் பெரும்பாலும் விளைநிலங்களாக இருக்கிறது என குறிப்பிட்டனர். பின்னர் தமிழக அரசு சார்பில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
இதுகுறித்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன், சிபிஐ ராமச்சந்திரன், சிபிஎம் நாகை மாலி, பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை ஆகியோர் விளக்கம் கோரியிருந்தனர்.
அதன்பேரில், அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கையில், ‘ சென்னைக்கு அருகே பரந்தூரில் பசுமை வளாக விமானம் ஏன் தேவை என்றால், தற்போது சென்னை விமான 22 மில்லியன் (2.2 கோடி) பயணிகளை கையாள கூடிய திறன் கொண்டது. 2009 முதல் 2019 வரையில் சென்னை விமான நிலையத்திற்கு பாணிகளை கையாளும் திறன் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் 3.5 கோடி பயனாளிகளை கையாளும் திறன் கொண்டதாக சென்னை விமான நிலையம் அமையும். மூன்றவது இடத்தில் இருந்த சென்னை தற்போது 5 வது இடத்தில் வந்துள்ளது. பெங்களூரு, ஹைதிராபாத் விமான நிலையங்கள் பயணிகளை கையாளும் விதத்தில் நம்மை முந்தி சென்று விட்டன.
அதேபோல, சரக்குகள் கையாளும் விதத்தில் 4 வசதி வளர்ச்சி பெற்றுள்ளோம். ஹைதிராபாத், பெங்களூரூ விமான நிலையம் நம்மை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளன. அதற்கு காரணம் அங்கு அமையப்பட்டுள்ள புதிய விமானங்கள் தான் .
நமது விமான நிலையத்தில் சரக்கு கையாளுவதில் சிரமம் இருக்கிறது. பெரும்பாலும் இரவு நேரம் மட்டுமே சரக்கு கையாளப்படுகிறது. விமான கட்டுமானம் முடிய 8 வருடம் ஆகும். 100 ருபாய் செலவு செய்தால் 325 ரூபாய் வருவாய் விமான நிலையம் மூலம் கிடைக்கும்.
சென்னையில் கூடுதல் விமான நிலையம் மூலம் சரக்கு முனையங்கள் அமைந்தால், நமக்கு நன்மைகள் ஏராளம். புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். இந்த புதிய விமான நிலையம் அமைக்க 11 இடங்களில் ஆய்வு செய்தோம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது.
நிலை அமைப்பு, தொழில்நுட்ப அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.