செக் குடியரசு நாட்டிற்கு சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன்,..! என்ன காரணம்…?

Published by
லீனா

செக் குடியரசு நாட்டிற்கு சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . திரு.தா.மோ.அநபராசன் அவர்கள் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார்.

இதுகுறித்து  குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் பங்கு கொள்ள 3.10.2022 அன்று இரவு செக் குடியரசு நாட்டிற்கு சென்றடைந்தார்.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . திரு.தா.மோ.அன்பரசன் அவர்களை 4.10.2022 அன்று செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப் பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

அதனை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களும் MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற் சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின் போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த ஆய்விற்கு பிறகு MSV கண்காட்சி அரங்கிற்கு சென்று அரங்கினை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திரு.வி.அருண் ராய் இ.ஆ.ப., நிதித்துறை அரசு துணை செயலாளர் திரு.சி.பிஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. மற்றும் தமிழக MSME தொழில் துறை குழுவினர், செக் குடியரசு உயர் அலுவலர்கள், செக் குடியரசின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago