போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போக்குவரத்துக்கு தொழிற்சங்கங்கள். இதன் காரணமாக பல இடங்களில் அரசு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், தமிழக முழுவதும் பொதுமக்கள் பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, பல்வேறு இடங்களில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
அரசு பேருந்துகள் இயக்கம்… மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!
மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், பேருந்துகளை இயக்கம் ஓட்டுநர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில்கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025