தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா.? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்.!
மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.
இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்தமாட்டார் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டார்.
அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினாலும், நமது மாநிலத்தில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. 420 கோடி ரூபாய் செலவில் 1000 பேருந்துகள் வாங்குவதற்கு இன்று அரசாணை வெளியிடப்பட்டுட்டள்ளது. அடுத்து டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்