டிரோன் மூலம் கொசு ஒழிப்பு.! அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.!
சென்னை ஓட்டேரி பகுதியில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுப்புறங்களில் கொசு மருந்து தெளிப்பது. ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு கொசு முட்டை உற்பத்தியை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டட் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல தற்போது, ஊழியர்களால் செல்ல முடியாமல் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள கொசுக்களை கொசு மருந்து தெளித்து அழிக்கும் நோக்கில் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
பறக்கும் சிறிய வகை டிரோன்கள் மூலம், கொசு மருந்தை தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில், ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணியினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள் கொசுமருந்தை நிரப்ப, டிரோன் ஆபரேட்டர்கள் அதனை இயக்கி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.