அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
கரூரில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையை அடுத்து, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச்செல்லும்போது நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் இன்று கரூர் அலுவலகத்தில் தொடர்ந்த சோதனைக்கு பிறகு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி, அவரது சகோதரர் நடத்திவரும் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
மேலும் தங்கள் அனுமதியின்றி திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையிலுள்ள அலுவலகத்தில் இது குறித்து நேரில் விளக்கம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…