“அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது செய்யவில்லை”- அமலாக்கத்துறை

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று அமலாத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதுவும், அசோக்குமாரை இன்று மாலையில் சென்னை அழைத்து வந்து, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்றும் கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பணமோசடி வழக்கில்  அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கைதை மறுத்துள்ள அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. அதன்படி, ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை அசோக்குமாருக்கு 4 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறியுள்ளது.

இதில்,  அசோக்குமாரின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் அடங்குவர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் கரூரில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. பின்னர் செந்தில் பாலாஜி கைது தொடர்ந்து, கரூரில் மீண்டும் சமீபத்தில் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.

இதன்பின் அசோக்குமார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சமயத்தில் தான் நேற்று பணமோசடி செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கொச்சியில் கைதானதாக தகவல் வெளியான நிலையில், இதனை மறுத்துள்ளது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

Enforcement Directorate report
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

2 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

4 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

6 hours ago