கைது செய்யப்படுவோம் என தெரிந்து அதற்கான மெமோவை வாங்க மறுத்ததால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை தகவல்.
தமிழகத்தில் இன்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை பரிந்துரைத்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
சிகிச்சை செய்யப்படுகிற நிலையில் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என்பதால், மருத்துவமனைக்கே நேரில் சென்று சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் வருகை தந்தனர்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் முன்வைத்த வாதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றுவரை நலமாக இருந்தார், அவருக்கு தேவையான உரிய சிகிச்சையை நாங்களே அளிக்க தயாராக உள்ளோம். அவர் கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் கைதுக்கான மெமோவை வழங்கியபோது அதைப் பெற மறுத்துவிட்டார்.
மேலும் சகோதரர், மனைவிக்கு போன் மூலம் தகவல் சொல்ல முயற்சிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்று முதன்மை நீதிமன்ற அமர்வில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…