கைதி எண் 1440 – அமைச்சர் செந்தில் பாலாஜி.! புழல் சிறை நிர்வாகம் நடவடிக்கை.!
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை கைதி வரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர் மட்டும் அவரை அனுமதி பெற்று சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புழல் சிறை துறை கட்டுப்பட்டில் விசாரணை கைதியாக செந்தில் பாலாஜி இருப்பதால், அவருக்கு வழக்கமான சிறை கைதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு சிறை கைதி எண் அளிக்கப்பட்டுள்ளது. 01440 என்ற எண் அளிக்கப்பட்டுள்ளது.