காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.!
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கையை ஏற்று, சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி அளித்தது.
இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்குப் அழைத்துச் செல்லப்பட்டார்.