2 லட்சம் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள் தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!
18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மின்துறை சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
அவர் கூறுகையில், 2700 பில்லர் பாக்ஸ் மூலம் சென்னையில் தரையில் இருந்து 1 மீ அளவுக்கு உயர்த்தி இப்பொது மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் பகல் நேரத்தில் 1440 ஊழியர்களும், இரவு நேரத்தில் 600 ஊழியர்களும் பணியில் இருப்பதாகவும், 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டார்.
நேற்று இரவு மட்டும் 2 இடங்களில் மின் பாதிக்கப்பட்டது. 10 நிமிடத்தில் அந்த புகார்கள் சரிசெய்யப்பட்டது. 18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது எனவும் அதன் மூலம் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.