கோவை மேம்பாட்டு பணிகளுக்கு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!
கோவையில் பழுதான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு விட்டது. – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
இன்று கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசுகையில், இன்று ஒரே நாளில் முதல்வர் உத்தரவின் பேரில் 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோவையில் பழுதான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு விட்டது.
தற்போது சிறப்பு நிதியாக 200 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 23 கோடிகள் கொடுக்கப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதம் 177 கோடி ரூபாய் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் அதன் பெயரில் இன்னும் நலத்திட்ட பணிகள் கோவையில் செயல்படும்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற செயல்பாடுகளை விட இரட்டிப்பு மடங்கு இந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்த உள்ளது.
சமூகவலைதளத்தில் வரும் செய்திகளை நம்பாதீர்கள். ஆதார் இல்லை என்றாலும் மின்கட்டணம் செலுத்தலாம். ஆதார் இணைப்பு என்பது மின் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர் ஒரு வேலை இறந்திருக்கலாம். அப்படி இருக்கும் மின் இணைப்புகளை மாற்ற அதற்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. என கோவையில் நடைபெற உள்ள சாலை பணிகள் மற்றும் மற்ற பணிகள் குறித்தும் விவரித்து பேசினார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.