சென்னை:பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம்,வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பார்வையிட்ட முதல்வர்,இன்று துறைமுகம்,ராயபுரம்,ஆர்கே நகர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக,துறைமுகம் பகுதியில் கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்ட முதல்வர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர்,ராயபுரத்தில் தேங்கியுள்ள மழைநீரை விரைவில் எடுக்கும்படி,அலுவலர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பால் மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,ஆர்கே நகர்,கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
இந்நிலையில்,பேரன்பின் உருவமாய் நம் தலைவர் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“பேரன்பின் பெரும் உருவமாய் நம் தலைவர் இருக்கும் போது,இறுக்கும் இயற்கையின் இடர்கள் என்றும் நம்மை வீழ்த்திடாது..! ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,24 மணிநேரம் இயங்கும் மின்னகம் உதவி எண்ணையும்(94987 94987) வெளியிட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…