“பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது,இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது” – அமைச்சர் செந்தில் பாலாஜி!

Default Image

சென்னை:பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம்,வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பார்வையிட்ட முதல்வர்,இன்று துறைமுகம்,ராயபுரம்,ஆர்கே நகர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக,துறைமுகம் பகுதியில் கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்ட முதல்வர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர்,ராயபுரத்தில் தேங்கியுள்ள மழைநீரை விரைவில் எடுக்கும்படி,அலுவலர்களுக்கு உத்தரவிட்ட  முதல்வர்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பால் மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,ஆர்கே நகர்,கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இந்நிலையில்,பேரன்பின் உருவமாய் நம் தலைவர் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“பேரன்பின் பெரும் உருவமாய் நம் தலைவர் இருக்கும் போது,இறுக்கும் இயற்கையின் இடர்கள் என்றும் நம்மை வீழ்த்திடாது..! ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம்”,என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்,24 மணிநேரம் இயங்கும் மின்னகம் உதவி எண்ணையும்(94987 94987) வெளியிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்