வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. புதிய மனு தாக்கல்…அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று காணொளி வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வில் நீதிபதி அல்லி முன் ஆஜர் ஆனார். அப்போது நீதிமன்ற காவல் ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் 15-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க வேண்டும். அமலாக்கத்துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், கைது செய்யும் நோக்கில் விதிகளை மீறி போலியான ஆவணங்களை அமலாக்கத்துறை தயாரித்தும், திருத்தியும் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீதிமன்றத்தில் ஆஜர்..!
ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் மனுவில் செந்தில்பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் புதிய மனு தொடர்பாக அமலாக்கத்துறை ஜனவரி 22-ம் தேதி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து அன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அல்லி தெரிவித்தார். இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை கடந்த முறை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025