செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி.
அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கொண்டு பைபாஸ் சர்ஜெரிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்திருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கையை ஏற்று, சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி அளித்துள்ளனர்.
மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று கருதிய நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு வழங்கிய நிலையில், நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி நீடிக்கவேண்டும் எனவும், அமலாக்கத்துறை மருத்துவக்குழுவும் சிகிச்சியை ஆராயலாம் என்றும் உத்தரவு அளித்துள்ளனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதிலளிக்கவும், வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…