காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றசாட்டு …!
கரூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டத்திலுள்ள அய்யர்மலை என்னும் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் குளித்தலை அண்ணா சமுதாயக் கூடத்தில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகைமின் மாநிலம் என்று கூறியவர்கள் நான்கரை லட்சம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜோதிமணி மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதாவது செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதை காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக சில செயல்களை செய்வதாகவும், கரூர் மாவட்டத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு நடந்து வருவது குறித்து புகார்கள் எழுவதாகவும், அது உண்மையாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.