அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதையொட்டி, எம்.பி – எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இன்று வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதன்பின் மீண்டும் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல், செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது. இதனிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முறையீடு செய்தது, தனது வாதத்தை முன்வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…