செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இன்று வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தத்த்தோடு, செந்தில் பாலாஜி தொடர்பான 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த முறை காணொளி காட்சி மூலம் ஆஜரான நிலையில், இந்த முறை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த முறை நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…