டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!
கடந்த 2024-2025 நிதியாண்டில் டாஸ்மாக் ரூ.48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு பயனளிக்கும்.
இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் இதன் முலம் பயன்பெற உள்ளனர்.
கடந்த 2024-2025 நிதியாண்டில் டாஸ்மாக் ரூ.48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விட இந்த ஆண்டு ரூ.2,488 கோடி அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ள அதே வேளையில், மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.