அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

senthil balaji

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் செந்தி பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக டிச.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு தரப்புக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. அதாவது, ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிகிச்சை முடிந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்