கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது. எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. – அமைச்சர் செல்லூர் ராஜு.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 17ம் தேதி அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். அண்மையில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது. எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன்.
எனக்காக பலர் பிரார்த்தனை செய்தனர். என் குடும்பத்திற்காக பலர் வேண்டி கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் தற்போது நலமுடன் இருக்கிறேன்.’ என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மதுரை கோரிப்பாளையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி அவரை வரவேற்றனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…