சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
வடசென்னை பகுதி மேம்பாட்டு நிதியாக மட்டும் சுமார் 4,181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்றும், இதனை கொண்டு வடசென்னை பகுதியில் மட்டும் சுமார் 219 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு அவற்றை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அத்தனையும் 2025க்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வீடில்லாமல் குடிசையில் வாழும் மக்களுக்காக, மாற்று நிரந்தர குடியிருப்புகள் அமைக்க தற்போது அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களை பார்வையிட்டு வருகிறோம் என்றும், வடசென்னை பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றும், அதனால் இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மேல்நிலை பள்ளியை மேம்படுத்த உள்ளோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு கொடுத்த பழைய குடியிருப்புகள் எங்கெல்லம் இடிந்து உள்ளதோ, அதனை சீர் செய்தோ அல்லது புதிய இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும் இதற்காக அந்த துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…