ரூ.1,00,00,000 இழப்பீடு கேட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.