பட்டாசு ஆலை தீ விபத்து.! விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை.! அமைச்சர் உறுதி.!
பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மூர்த்தி உறுதி.
இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை எனும் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.
அமைச்சர் மூர்த்தி இந்த விபத்து குறித்து பேசுகையில், ‘ பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்னர் தான், பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை, விதிமுறைகள் மீறி பட்ட்டாசு ஆலைசெயல்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி தெரிவித்து இருந்தார்.