நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்.
விடியா திமுக அரசின் திறமையின்மையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றசாட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கோடை மழையில் இருந்து பாதுகாக்க அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் தார்ப்பாய் வழங்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது குறிப்பிட்டவாறு, மழையால் நெல்மணிகள் வீணாவதை தடுக்கும் வகையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் இனி திறந்த வெளியில் எங்கும் சேமிக்கப்படாமல், நேரடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும். மேலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய விதிகள் பின்பற்றப்படுகின்றன. புதிய நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்க பல்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…