நம் வீடு தேடி குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயு.! மத்திய இணை அமைச்சர் கூறிய சூப்பர் தகவல்.!
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, தமிழகத்தில் அடுத்து நிறைவேற்றபட உள்ள மத்திய அரசின் திட்டங்களை பற்றி கூறினார்.
அதில், வீடு தேடி குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு அனுமதி கொடுத்துள்ள்ளது.
அதனால் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இப்படி குழாய் மூலம் எரிவாயு கொடுப்பதால், விலை குறையும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதியதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாம். அதனால், புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். அப்படியே பெட்ரோல் பங்குகளில் எரிவாயு நிரப்பிக்கொள்ளவும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.