ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி..!திமுக வேட்பாளர் வெற்றி..!

ராஜபாளையம் தொகுதியில்,திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணும் பணியானது தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 68,737 வாக்குகளும், திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 72195 வாக்குகளும் பெற்றனர்.
இதனால், திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 3,458 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025