இந்த கொலைகளுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை.! அமைச்சர் ரகுபதி விளக்கம்.! 

Mnister Ragupathi

சென்னை : தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை பற்றியும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொடர் கொலைகள் நிலவுகிறது தமிழ்நாடு கொலை மாநிலமாக உருவாகியுள்ளது என விமர்சித்தது பற்றியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக, விரக்தியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. தமிழ்நாடு கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூகத்திற்கு எதிரான சமூக விரோதிகளை களையெடுக்கும் மாநிலம்.

அதிமுக ஆட்சியில் தான், ஜெயலலிதாவிற்கு நெருக்கமான கொடநாட்டில் தொடர் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுசம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியவர் இபிஎஸ். அவர் குறிப்பிட்ட 5 கொலை சம்பவத்தில் ஒன்று புதுச்சேரியில் நடந்தது.

மீதமுள்ள 4 கொலைகளும் சொந்த கரணங்கள், முன்விரோதம், பகைமையால் நேர்ந்த கொலைகள். இதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை. இந்த மாதிரியான முன்விரோத கொலைகளுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. அரசியல் கொலைகள் எதுவும் இங்கு நடைபெறவில்லை.

முன்பகை கொலையை கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அதனையும் நாங்கள் தற்போது கண்காணித்து வருகிறோம். ரவுடிகளுக்கிடையேயான முன்பகை கண்டறிந்து வருகிறோம். அதனையும் அறிந்து கொண்டு வருகிறோம். இந்தியாவின் முதன்மையான மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தை பின்னோக்கி இழுத்துவிட முடியுமா என இபிஎஸ் பார்க்கிறார். தமிழ்நாடு தான் இந்தியாவியிலேயே சிறந்த அமைதி பூங்கா மாநிலம் எனும் நிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழத்தை முன்னிலைப்படுத்துவார் என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்