ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி..!
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.