பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.

Minister Ragupathy

Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More – போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… விசிக நிர்வாகியை நீக்கிய கட்சி தலைமை!

இது தொடர்பாக, கடந்த 2022இல், 2416 வழக்குகள் பதியப்பட்டு, 1916 பேருக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது. 2023இல் 3567 வழக்குகள் பதியப்பட்டு 2988 பேருக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது. போதை பொருள் வழக்குகளில் சிக்கியவர்களில் 14 பேர் பாஜக பிரமுகர்களாக உள்ளனர் என போலீசார் செய்தி குறிப்பில் பதிவாகியுள்ளது என அமைச்சர் ரகுபதி கூறினார்.

Read More – ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகளவு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் நாட்டிலேயே மிக நீண்ட கடற்கரை துறைமுகம் உள்ளது. அங்கு தான் 26,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் , மத்திய அரசு பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட வடமாநிலங்களில் தான் கஞ்சா பயிரிடப்படுவதாக செய்திகள் வருகின்றன. முதலில் அண்ணாமலையை , அவர் கட்சியில் இருக்கும் குறைகளை களைய சொல்லுங்கள் என விமர்சனம் செய்தார்.

Read More – ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டாம்.. பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி பற்றி பேசுகையில், செந்தில் பாலாஜி மீது இன்னும் விசாரணை தான் நடைபெற்று வருகிறது. முதல்வர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை. அவராகவே தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், ரகுபதி விவகாரத்தில் , அவர் மீது அளிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் அவர் தொடர்ந்து வருகிறார். ராகுல் காந்தி மீது தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர், நீக்கப்பட்டு அவர் எம்பி பதவியில் தொடர்ந்தார் என்றும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்