அமைச்சர் பொன்முடி மகன் கெளதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை.
அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கெளதம சிகாமணி சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.
2006-2011 காலகட்டத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுபோன்று அமைச்சரின் மகன் கெளதம சிகாமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடியிடம் கடந்த இரு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின் சோதனை குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் வெளியிட்டது. அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025