கௌரவ விரிவுளையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!
கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர், ஆசிரியர் போன்ற பணிகளுக்கு 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஏற்கனவே கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தற்போது காலிப்பணியிடங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ கௌரவ விரிவுரையாளர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு நேர்முக தேர்வில் 15 மதிப்பெண் கொடுக்கப்படும். மொத்த மதிப்பெண் 30 அதில் 15 மதிப்பெண் கொடுக்கப்பட்டுவிடும். அவர்கள் 8 வருடம் 10 வருடம் என அனுபவங்கள் வைத்துள்ளார்கள் அதனால் இந்த முன்னுரிமை. கௌரவ விரிவுரையாளர்களுக்கு இப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அதிக வாய்ப்பு இவர்களுக்கு இருக்கிறது.’ என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.