கற்றுக்கொள்ளவதற்கு ஆர்வமும், புதிய தயாரிப்புகளுக்கான எண்ணமும் இருக்க வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!
கல்லூரியில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
இன்று சென்னை, கிண்டியில், எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது குறித்து கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘ கல்லூரியில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும்.’ என பேசினார்.
மேலும் கூறுகையில், ‘ தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களிலும் தொழில் வளர வேண்டும். அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் நன்கு வளர வேண்டும். தொழில் செய்ய விரும்புவோர் அருகில் உள்ள கல்லூரிகளுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். அதற்கு கல்லூரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.’ என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘ படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு சென்று பயிற்சி பெறும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.